“எங்க அம்மா அப்பவே சொன்னாங்க” - ஐபிஎல் ஏலம் குறித்து தினேஷ் கார்த்திக்!

dinesh karthik

இந்தியாவில்ஆண்டுதோறும்நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி சிறிய அளவிலானஏலம், நேற்று (18.02.2021) சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 292 வீரர்களின் பெயர்கள்இடம்பெற்றிருந்தன. யாருமே எதிர்பார்க்காத வகையில்வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்குஏலம் எடுக்கப்பட்டனர்.

கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சன் ரூ.14 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சுஆல்ரவுண்டர் கைல் ஜேமீசன்15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோல்ரிலே மெரிடித்8 கோடிக்குவாங்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது தொடர்பாக கிரிக்கெட்வீரர்கள், நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.

இந்தியகிரிக்கெட்வீரர் தினேஷ்கார்த்திக், "எனது அம்மா என்னைவேகப்பந்து வீச்சாளராக ஆகுமாறுகூறினார். நான் எனதுதந்தை சொல்வதைக் கேட்டேன். எனது அம்மாவிற்கு ஒரு பார்வை இருந்தது. அது சரியானது,இல்லையா?" எனதனதுட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதேபோல்இங்கிலாந்து கிரிக்கெட்வீரர் சாம்பில்லிங்ஸ், “எனதுகாதலி சாரா என்னிடம், நீ ஏன் பந்து வீச்சாளராகவில்லை எனக் கேட்கிறார்” எனதனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Dinesh karthik ipl 2021 ipl auction
இதையும் படியுங்கள்
Subscribe