Advertisment

சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்.. நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ...

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

dinesh karthik controversy

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் போன்று அந்த நாட்டில் நடைபெறும் கரிபியன் கிரிக்கெட் தொடரில் உள்ள ஒரு அணியின் ஜெர்சியை அவர் அணிந்திருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடும் அணியின் உரிமையாளரான ஷாருக் கான், கரிபியன் கிரிக்கெட் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்ற அணியின் உரிமையாளராக உள்ளார். அந்த அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு தினேஷ் கார்த்திக், அந்த அணியின் பயிற்சியாளரான பிரெண்டன் மெக்குல்லத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானது. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இருக்கும் இந்திய வீரர்கள், இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது விதிமீறல் என்பதால், தினேஷ் கார்த்திக்கிடம் உரிய விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

kolkata knight riders Dinesh Karthick
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe