Advertisment

தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்!

Dinesh Karthik

Advertisment

ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச் செய்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக் முறியடித்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் 54-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம் கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு வீரர்களை, கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் அவர் செய்த மொத்த கேட்ச்-களின் எண்ணிக்கையானது 110-ஆக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச் செய்தவர்கள் பட்டியலில், 196 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 110 கேட்ச்-களுடன் முதலிடத்தில் உள்ளார். 204 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 109 கேட்ச்-களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Dinesh Karthick ipl 2020
இதையும் படியுங்கள்
Subscribe