Advertisment

டிஜிட்டல் டாடா ஐபிஎல்; தோனி கீப்பிங்  சூர்யகுமார் யாதவ் பேட்டிங்

digital tata ipl

"டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல்" என்ற தலைப்பில் ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் பிரச்சாரத்தின் புது அனுபவத்திற்காக எம் எஸ் தோனி, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தனர்.டாடா ஐபில்-ன் டிஜிட்டல் பார்ட்னர்கள், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை இலவசமாக டிஜிட்டலில் கண்டு அனுபவிக்கவும்,லீக்கை நாடு முழுவதும் கொண்டு செல்லவும் ஜியோசினிமா அதன் தொலைக்காட்சி காணொளியை 11 மொழிகளில் வெளியிட்டது

Advertisment

மும்பை 17 மார்ச் 2023: ஜியோசினிமா தனது டாடா ஐபில் விளையாட்டு பிரச்சாரத்தை இந்திய ஜாம்பவான் MS தோனி மற்றும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் துவக்கி வைத்தனர். "டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபில்" என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு, பிரபல நடிகர்களான ஸ்வேதா திரிபாதி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களுடன் டாடா ஐபில் - ஐ டிஜிட்டலில் இலவசமாக பார்ப்பது தான் இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

Advertisment

11 மொழிகளில் வெளியான இந்த டாடா ஐபில் விளம்பர பிரச்சாரத்தை, சிறந்த விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளரான அமித் ஷர்மா இயக்கியிருக்கிறார். ஒரு சிறிய நகர இனிப்புக் கடையில் நான்கு நண்பர்கள் குழு ஒன்று கூடி டாடா ஐபில் ஆட்டத்தை டிஜிட்டலில் காணுகின்றனர். அவர்கள் அந்த கடையின் உரிமையாளரையும் வற்புறுத்தி டாடா ஐபில்-ஐப் பார்க்க வைக்கின்றனர். தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்தந்த போட்டிகளில் விளையாடி இருப்பதை, காணும் போது திடீரென்று ஒரு நகைச்சுவை நிகழ்வு அனைவரையும் சிரிக்க வைக்கிறது. அவர்கள் திரும்ப திரும்ப அந்த நகைச்சுவையை பல்வேறு வடிவங்களில் பார்த்து ரசிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே ரசிகர்களிடம் கெஞ்சுவது போன்ற நிகழ்வு மிகவும் ஈர்க்கப்படுகிறது.

இந்த டாடா ஐபில்-ஐ பார்வையாளர்கள் அற்புதமாக அனுபவிக்க அந்த நான்கு நண்பர்கள் குழுவில் அங்கு உள்ள மக்கள் அனைவரும் வந்து சேர்கிறார்கள். ஜியோசினிமாவில் டாடா ஐபில்-ஐ நேரலை பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கேமரா கோணங்களையோ அல்லது முக்கிய தருணங்களை ரீப்ளே செய்து கண்டு மகிழலாம். இந்த பரிமாற்றத்தின் மூலம் ஜியோசினிமா மிகவும் முன்னோடியாக தொலைக்காட்சியால் வழங்க முடியாத இந்த அம்சத்தை டாடா ஐபில் டிஜிட்டலில் வழங்குவது இந்த பிரச்சாரத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். நுகர்வோர் வாழ்க்கை முறை தற்பொழுது அதிகம் டிஜிட்டல் சேவைகளை நம்பி வாழ்கின்றனர். ஸ்க்ரோலிங் (Scrolling), ஸ்வைப் செய்தல் (Swip),பெரிதாக்குதல் (Zooming) மற்றும் ஸ்க்ரப்பிங் (Scrubbing) செய்தல் போன்ற பல ஸ்கீரின் வகை அம்சங்கள் இந்த டாடா ஐபில் (TATA IPL)- ல் கண்டு மகிழலாம். இந்த சீசனில் TATA IPLஐ எப்படி மக்கள் காண ஏதுவாக நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய எங்கள் பிரச்சாரம் முயற்சிக்கிறது.

ரசிகர்களை மையமாகக் கொண்ட இந்த டிஜிட்டல் சலுகைகளின் தொகுப்பின் மூலம், ஜியோ சினிமா (JioCinema) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் வீரர்களை எப்படி, எப்போது, எங்கு வேண்டுமானாலும் காண்பதற்கு தடையில்லா முன்னோடியில்லாத கட்டுப்பாட்டை வழங்கும்,” என்று வயகாம் 18இன் கிரியேட்டிவ் ஹெட் ஆஃப் மார்க்கெட்டிங் (Creative Head of Marketing), ஷகுன் சேடா கூறினார்.

“டாடா ஐபில்-லை நாம் பார்க்கும் முறையை ஜியோசினிமா மாற்றப் போகிறது. எங்களின் இந்த பிரச்சாரம், டிஜிட்டல் பொழுதுபோக்கு தளத்தை அதிகபட்சமாகப் பெற குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்லும். ஜியோசினிமா (Jiocinema) அவர்களுக்கு டாடா ஐபில் (TATA IPL)அனுபவத்தை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பல சலுகைகள் வழங்குவதற்கான சிறந்த செயலியாக செயல்படுகிறது,” என்று ஓகில்வி இந்தியாவின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ( Chief Creative Officer) சுகேஷ் நாயக் கூறினார்.

டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல் பிரச்சாரம், மற்ற தொலைக்காட்சி அம்சங்களில் இல்லாத பெருமையை கொண்டுள்ளது - இது இலவச ஸ்ட்ரீமிங், முதல் முறையாக 4K ஸ்ட்ரீமிங், 12 மொழிகளில் வர்ணனை, மல்டி-கேம் பயன்முறை, 360 VR, சராசரி ரசிகரின் பார்வை அனுபவத்தை உயர்த்தும் பலவற்றை வழங்குகிறது. ஓகில்வி மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு குரோம் பிக்சர்ஸ் தயாரித்த டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் TATA IPL என்பது அச்சு (Print), டிஜிட்டல் (Digital) மற்றும் OOH (Out of Home) வழிகளில் 360 டிகிரி பரப்புரையாகும்.

டாடா ஐபில் (TATA IPL) இன் 2023 சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த சீசனில் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக அனைத்து போட்டிகளும் ஜியோசினிமாவில் நேரலையில் காணலாம். இந்த ஜியோசினிமாவை இலவசமாக பின்வரும், ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது.

Dhoni IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe