மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு நீக்கம்! பிரபல கால்பந்து வீரருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி!

football

மாரடோனா, அர்ஜெண்டினாவைசேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ஆவர். இவர் 1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியை வழிநடத்தியவர். சில தினங்களுக்கு முன்னால் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் லா பிளேடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதுகுறித்து மாரடோனாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் லியோபோல்டோ லூக் கூறுகையில், "மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை வெற்றிகரமாக நீக்கினோம். மாரடோனா அறுவை சிகிச்சையைபொறுத்துக்கொண்டார். அவர் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைபொறுத்து எத்தனை நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்" எனக் கூறினார்.

Diego Maradona football
இதையும் படியுங்கள்
Subscribe