Advertisment

காதல், திருமணம் குறித்து மனம் திறந்த தோனி...

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி காதல் மற்றும் திருணம் குறித்தான தனது பார்வையை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisment

dhonis view on marriage and love

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எல்லா ஆண்களும் திருமணத்திற்கு முன் சிங்கம் தான். ஆனால் திருமணத்துக்குப் பின் எல்லாம் மாறிவிடும். எனக்கும் சாக்ஷிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அன்றிலிருந்து வீட்டில் அனைத்தையும் அவர்தான் கவனிக்கிறார். என் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என எனக்கு தெரியும். அதேபோல அவரின் எந்த செயலுக்கும் நான் ஒருபோதும் இடையூறு செய்தது இல்லை. வயதான காலத்தில்தான் கணவன் மனைவிக்கு இடையிலான உறவு பலமாகும். 50 வயதைக் கடந்த பின்தான் அதனை உணர முடியும். 55 வயதை அடையும்போது, அதுதான் காதலின் உண்மையான வயது என நான் நினைக்கின்றேன்" என தெரிவித்தார்.

Advertisment

team india Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe