இந்தியஅணியின் முன்னாள் கேப்டனான தோனியை நாங்கள் தீவிரவாதி என்று தான் அழைப்போம் என தோனியுடன் ரஞ்சி கோப்பையில் விளையாடிய அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

Advertisment

dhonis ranji team mate about dhoni

பீகார் அணியில் தோனியுடன் விளையாடிய அவரது நெருங்கிய நண்பர் சத்ய பிரகாஷ் தோனியை பற்றி கூறுகையில், "தோனியை நாங்கள் தீவிரவாதி என்று தான் அழைப்போம். அவர் அவ்வளவு அதிரடியாக பேட்டிங் ஆடுவார். 20 பந்துகளில் 40 முதல் 50 ரன்களை எளிதாக அடிப்பார். ஆனால் இந்திய அணிக்காக விளையாடும் போது சற்று நிதானமாகவே அவர் விளையாடுகிறார். பீகார் அணியில் விளையாடும் போது தோனி அரிதாகதான் தான் கேப்டனாக பொறுப்பேற்பார். ஆனால் தற்போது இந்திய அணியின் சிறந்த கேட்பனாக மாறியுள்ளார். அவர் எப்போதும் இந்தியில் தான் பேசுவார். ஆனால் இப்போது ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்" என தெரிவித்துள்ளார்.