Dhoni's new record in 16th IPL season

16 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார் 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6 ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisment

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.கான்வே 47 ரன்களுக்கும், பின் வந்த துபே 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

Advertisment

தொடர்ந்து வந்த மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதி ஓவர்களில் ராயுடு அதிரடி காட்டி வேகமாக ரன்களை சேர்த்தார். இறுதி ஓவரின்இரண்டாம் பந்தில் களமிறங்கிய தோனி தான் சந்தித்த முதல் இரு பந்துகளையும்சிக்ஸர்களாகபறக்கவிட்டார்.இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரரானார்.

இதற்கு முன் கோலி 224 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6706 ரன்கள் குவித்து அதிக ரன்கள்குவித்தவராக முதல் இடத்தில் உள்ளார். தவான் 199 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6086 ரன்களும், ரோஹித் 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5764 ரன்களும், டேவிட் வார்னர் 155 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5668 ரன்களும், ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5528 ரன்களும்,ஏபி டி வில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5162 ரன்கள் அடித்துள்ளனர்.

அதே சமயத்தில் தோனி விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்களைஎடுத்த இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 39 ஸ்டெம்பிங்ஸ் மற்றும் 131 கேட்சுகளை பிடித்து மொத்தம் 170 விக்கட்களை எடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 159 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.