dhoni's mom about his recent viral picture

வெள்ளை தாடியுடன் வைரலான தோனியின் புகைப்படம் குறித்து, தோனியின் தாய் தேவகி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

கிரிக்கெட்டிலிருந்து அண்மைகாலமாக விலகியிருக்கும் தோனி, ஊரடங்கு நேரத்தைதனது ராஞ்சி பண்ணை வீட்டில் குடும்பத்தாரோடு செலவழித்து வருகிறார். கடந்த ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின் தோனியை களத்தில் காண முடியாத ஏக்கத்தில் இருந்துவரும் ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளிப்பது, அவரது மனைவி சாக்ஷியின் சமூக வலைதளப்பக்கம்தான். அதில் தோனியின் புகைப்படங்கள், ஸிவாவுடன் தோனி விளையாடும் வீடியோ உள்ளிட்டவற்றைபகிர்ந்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறார் சாக்ஷி.

Advertisment

அந்த வகையில் அண்மையில் சாக்ஷி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தோனியின் தோற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியது எனலாம். முழுவதும் நரைத்த தாடி, சோர்வான முகம் என தோனியின் அந்த காணொளி சமூகவலைதளங்களில் பலரையும் கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் இதுகுறித்து தோனியின் தயார் தேவகி பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில், "ஆம், நான் அவரது புதிய தோற்றத்தைபார்த்தேன், ஆனால் அவர் அவ்வளவு வயதானவர் போல இல்லை. எந்தவொரு தாய்க்கும் அவரது குழந்தைகள் எப்போதும் வயதானவராகதெரியமாட்டார்கள்" என உருக்கமாகதெரிவித்துள்ளார்.