இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தோனியின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisment

dhoni's manager about his retirement from international cricket

ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் தோனி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தோனிக்கு ஆதரவாகவும் பல பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தோனி விரைவில் ஓய்வு பெற இருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தோனியின் நண்பரும், மேலாளருமான அருண் பாண்டே தற்போது கூறியுள்ள தகவல் தோனி ரசிகர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. "சமீப காலமாக பேட்டிங் செய்யும் போது இன்னிங்ஸ்களின் நடுவே தோனி தனது பேட்களை மாற்றி விளையாடுவதற்கு அவரது ஓய்வு முடிவே காரணம். கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில் எஸ்.ஜி மற்றும் வேம்பயர் பேட்களை பயன்படுத்தி விளையாடினார். அதற்காக அந்த நிறுவனங்களுக்கு நன்றி விதமாகவே தோனி தனது பேட்களை மாற்றி ஆடுகிறார்" என அருண் பாண்டே தெரிவித்துள்ளார். தோனியின் மேலாளரே இப்படி கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.