Skip to main content

தோனியின் மிகச்சிறந்த ஐடியாவுக்கு அவரே சொந்தக்காரர் இல்லை?

Published on 10/06/2018 | Edited on 11/06/2018

உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும், கேப்டன் கூல் என பலராலும் புகழப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. களத்தில் தோல்வியைத் தழுவ வேண்டிய கட்டாயம் ஏற்படும் போதெல்லாம், புதிய ஐடியாக்களை யோசித்து அதை செயல்படுத்தியும் காட்டுவார். நெருக்கடியான சூழலில் கடைசி நம்பிக்கையாக தோனி தன் தொப்பிக்குள் இருக்கும் முயலை எடுத்து வீசவேண்டும் என்று வர்ணனையாளர்களே சொல்வார்கள். 
 

Dhoni

 

அப்படிப்பட்ட தோனியின் ஐடியாக்களில் மிகச்சிறந்ததாக சொல்லப்படும் ஒன்றுக்கு, அவரே சொந்தம் இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஃபார்மில் இருந்த யுவ்ராஜுக்கு பதிலாக தோனி களமிறங்குவார். அதுவரை ஃபார்முக்கு வராத தோனி களமிறங்கி அந்தத் தொடரின் சிறந்த ஆட்டத்தை விளையாடி கோப்பையையும் வென்று தருவார். 
 

உண்மையில் இந்த ஐடியா தோனிக்கு இயல்பாக தோன்றவில்லை. ‘வாட் தி டக்’என்ற நிகழ்ச்சியில் சச்சின் மற்றும் சேவாக் கலந்துகொண்டு பேசினர். அப்போது சேவாக், ‘2011ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் களத்தில் இருந்தனர். அப்போது சச்சின் தெண்டுல்கர் வலதுகை ஆட்டக்காரர் விராட் கோலி அவுட் ஆனால் தோனியும், இடதுகை ஆட்டக்காரர் கம்பீர் அவுட் ஆனால் யுவ்ராஜும் இறங்கவேண்டும் என தோனியிடம் அறிவுறுத்தினார். அந்தத் தொடரில் தோனியிடம் நேரடியாக சச்சின் கூறிய ஐடியா அதுமட்டுமே. அதனால்தான் விராட் அவுட் ஆனதும், ஃபார்மில் இருந்த யுவ்ராஜுக்கு பதிலாக தோனி களமிறங்க நேரிட்டது’ என்ற உண்மையை தெரிவித்துள்ளார். 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.