/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/m-s-dhoni (1)_0_0.jpg)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்தியாவின் 28 ஆண்டு கனவை நனவாக்கிய நாள்ஏப்ரல் 2. ஏழு ஆண்டுகளுக்கு முன் (2011) சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வாங்கிக் கொடுத்த தினம் இது. தோனி சிக்ஸ்களையும், பௌண்டரிகளையும் அடித்த அந்த பேட்டையும் எவராலும் மறக்கமுடியாது. அந்த பேட் ஏலத்திற்கு விடப்பட்டது.
அந்த பேட்டை ஆர்.கே குளோபல் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் சுமார் 72 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. அதில் வந்த பணம்'ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட்' சாரிடி டின்னர் (East meets West Charity Dinner)என்ற லண்டனை சேர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. உலகிலேயே மிக விலை உயர்ந்த பேட் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது டோனியின் பேட்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)