Advertisment

தோளில் கிட்பேக்குடன் வாட்டர் பாயாக மாறிய தோனி!

Dhoni

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளும் டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் வைத்து நடைபெற்றன.

முதல் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இதன்மூலம், 2 - 0 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்திய அணி, ஜூலை மூன்றாம் தேதி முதல் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்குப் பிறகு, இரண்டாவது போட்டிக்காக அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, கீப்பர் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால், நேற்றைய போட்டியில் களமிறங்காத தோனி, சக வீரர்களுக்காக கிட் பேக் சுமந்தபடி, வாட்டர் பாயாக மாறிய சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பொதுவாக பென்ச்சில் இருக்கும், அணிக்குத் தேர்வாகாத புதிய வீரர்களே வாட்டர் பாயாக செயல்படுவார்கள் என்பதால், தோனியின் இந்த செயல் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்குமுன்னர் சென்ற ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக நடந்த வார்ம் அப்போட்டியிலும் தோனி வாட்டர்பாயாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

indian cricket ireland MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe