Advertisment

ரசிகரின் செய்கையால் மனம் நெகிழ்ந்த தோனி!

dhoni

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். துபாயில் பணி செய்து வரும் இவர், தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஆவார். விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய கோபி கிருஷ்ணன், தன்னுடைய இல்லத்திற்கு மஞ்சள் நிற வர்ணம் பூசி, அதில் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்ந்த புகைப்படத்தையும் வரைந்துள்ளார்.

Advertisment

இந்த வீட்டின் தோற்றமானது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டனான தோனி கோபி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் இது குறித்து பேசியுள்ள தோனி, "இந்த வீட்டின் தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். இது எனக்கானது மட்டுமல்ல. சென்னை அணி மற்றும் என் மீதான அன்பை இது வெளிப்படுத்துகிறது. இது சாதாரண விஷயமில்லை, நீங்கள் எடுக்கும் முடிவிற்கு, மொத்த குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும், இது நீடித்து நிலைக்க கூடியது. சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை போட்டுவிட்டு, உடனே மாற்றிவிடுவது போல அல்ல. ஆகையால், அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் என் நன்றிகள்" எனக் கூறினார்.

Dhoni ipl 2020
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe