Advertisment

ஓய்வு முடிவு குறித்து அதிகாரபூர்வமாக தெரிவித்த தோனி...

இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தோனியின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisment

dhoni statement about his retirement

ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் தோனி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தோனிக்கு ஆதரவாகவும் பல பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தோனி விரைவில் ஓய்வு பெற இருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தோனியின் மேலாளரும், தோனி விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என கூறியிருந்தார்.

இதனால் வருத்தத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு தற்போது தோனியே நேரடியாக பேட்டி வாயிலாக பதிலளித்துள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து ஏபிபி நிறுவனத்திடம் பேசியபோது, "நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இன்றைய போட்டிக்கு முன்பே நான் ஓய்வு பெற வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள்," என கூறியுள்ளார்.

Dhoni icc worldcup 2019 team india
இதையும் படியுங்கள்
Subscribe