இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சமீபகாலமாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வருகிறார். உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வில் உள்ள தோனியை கிரிக்கெட் மைதானத்தில் காணமுடியாத அவரது ரசிகர்கள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் அவரது வீடியோக்களை பார்த்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Advertisment

dhoni singing video went viral

அந்த வகையில் தற்போது இணையத்தில் தோனி பாடல் ஒன்றை பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப்பை சேர்ந்த தோனியின் நண்பர்பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், "எச்சரிக்கை: உங்கள் சொந்த ரிஸ்கில் இந்த வீடியோவை பார்க்கவும்" என பதிவிட்டு தோனியை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.