சச்சின் ஆட்டம் இழந்தவுடன் டிவியை அனைத்து விட்டு வீட்டை விட்டு வெளிநடப்பு செய்த ரசிகர்களை, ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை நாற்காலியை விட்டு நகரவிடாமல் உட்கார வைத்தவனின் பெயர் தோனி. இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு விதமான கேப்டன்களை கண்டுள்ளது. அதில் தனக்கென் தனி வரலாறு ஒன்றை எழுதியவர் தோனி.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பைக்குப் பிறகு தேர்வுக்குழு தோனியை இந்திய அணியில் இருந்து சற்று ஒதுக்கியேவைத்தது. அவர் ஆட்டத்தில் இடம்பெறவில்லை என்றாலும் கூட 'தோனி... தோனி...' என்ற குரல்களும், 'மிஸ் யூ தோனி' என்ற பேனர்களும் மைதானத்தில் தட்டுப்படத்தான் செய்கின்றன.
இதற்கிடையில் மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி, சக நண்பர்களுடன் கடற்கரை ஓரத்தில் வாலிபால் விளையாடும் வீடியோ வைரலானது. தற்போது தோனி, ஆர்.பி.சிங், சாவ்லாவுக்கு பானிப்பூரி பரிமாறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ரீட்விட் செய்து கொண்டாடி வரும் தோனி ரசிகர்கள், ஐபிஎல் ஆடுகளத்தில் உங்களை காண ஆர்வமாக உள்ளோம் என்ற கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.