ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தோனியின் ஆட்டம் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 2 ரன்கள் என 24 ரன்கள் சேர்த்தார். ஆனால், கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தாக்கூர் ரன் அவுட் ஆனார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஒரு ரன்னில் வெற்றிவாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது, இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 48 பந்துகளுக்கு 84 ரன்கள் குவித்தார். நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே தோற்றாலும் நேற்று இரவு முழுவதும் ட்விட்டர் ட்ரெண்டிங் சிஎஸ்கே -வும், தோனியும்தான். அந்த அளவு தோனி நேற்று அவரது ஆட்டத்தால் ரசிகர்களை வியப்படைய வைத்தார் என்பதே உண்மை. அந்த வகையில் தோனி இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வேண்டும் என சில ரசிகர்கள் ட்வீட் போட ஆரம்பித்தனர். இந்த ட்வீட்டுக்கள் நேற்று இணையத்தில் வைரலானது.