இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர் தோனி, இந்த தொடர்களில் பங்கேற்காமல் ராணுவத்தில் தனது பணிகளை கவனிக்க போவதாக அறிவித்தார். இதன்பின் பாராமிலிட்டரியின் 106-வது பட்டாலியனில் இயங்கும் விக்டர் படையில் சேர்ந்து காஷ்மீர் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி தோனிக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இந்நிலையில் அவர் தனது ராணுவ குழுவில் உள்ள சக வீரர்களுடன் இணைந்து வாலிபால் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.