Advertisment

முடிஞ்சா என்ன பிடி! ரசிகருடன் ஓடி விளையாடிய தோனி...

thala 7

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் தொடக்கமாக இரண்டு டி20 போட்டிகள் நடைபெற்றன. அந்த இரண்டு போட்டியிலுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அப்போட்டியில் மைதானத்தில் ரசிகர் ஒருவர் தோனியை துரத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்த இரண்டாது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் சதத்தினால் 250 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

Advertisment

முதலில் இந்திய அணி பேட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, ஃபீல்டிங்கிற்காக மைதானத்திற்குள் உள்ளே வரும்போது ‘தல 7’ என்று அச்சிடப்பட்ட டீஷார்ட் ஒன்றை போட்டுக்கொண்டு ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி வந்தார். அவரை கண்ட தோனி அவரிடம் பிடிப்படாமல் இருக்க சக வீரர்களுக்கு பின் ஒழிந்து பின் அந்த ரசிகருடன் ஓடி விளையாண்டார். உடனே ரசிகரும் விடாமல் தோனியை துரத்த, பிட்ச் அருகே வந்தவுடன் தோனி நின்று ரசிகரை அரவணைத்து அனுப்பி வைத்தார். பிறகு இந்த வீடியோ நேற்று சமூக வலைதளம் முழுவதும் வைரலாக பரவியது.

ind vs aus MS Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe