Advertisment

இன்னும் 2 சிக்ஸர் அடித்தால் தோனி புது சாதனை படைப்பார்!

dhoni

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஏழாவது நாளான இன்று, சென்னை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. சென்னை அணி, நடப்பு ஐ.பி.எல்-ல் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் கண்டுள்ளது. டெல்லி அணி, ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி கண்டுள்ளது. இன்று நடக்க இருக்கும் போட்டியில் டெல்லி அணி வெற்றியைத் தொடரவும், சென்னை அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்பவும் முயற்சிக்கும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.

Advertisment

சென்னை அணியின் கேப்டனான தோனி, இப்போட்டியில் புதிய சாதனையைப் படைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. தோனி இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் அடித்துள்ள மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 298. இன்னும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால், ஐ.பி.எல் தொடரில் முன்னூறு சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைப்பார். மேலும், தோனி இந்தச் சாதனையைப் படைக்க இருக்கும் மூன்றாவது இந்திய வீரர் ஆவார். இதற்கு முன்பு இந்தப் பட்டியலில் ரோகித் ஷர்மா மற்றும் ரெய்னா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Advertisment

Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe