ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான போட்டியில் பங்குபெறும் அணிகள் அங்கு சென்றுள்ளன. இதனையடுத்து நேற்று முதல் உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தோனி ரசிகர்களால் இந்தியாவில் உள்ள தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisment

dhoni name in pakistan jersy went viral

பாகிஸ்தான் அணியின் ஜெர்ஸியில் தோனி பெயர் மற்றும் 7 என்ற எண் பதிவிட்டதை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பல இந்திய ரசிகர்களும் பாராட்டியும் பகிர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அந்த பதிவில் பேசிய பல பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தானிலும் தோனிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என தெரிவித்து வருகின்றனர். தோனியின் இந்த பாகிஸ்தான் ஜெர்ஸி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.