ADVERTISEMENT

தல தோனியின் லக்கேஜை மாற்றி எடுத்து சென்ற பயணி..!

08:00 PM Dec 10, 2019 | suthakar@nakkh…

கொல்கத்தா விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் லக்கேஜை சக பயணி ஒருவர் மாற்றித்தூக்கிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு தொடர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு விமானத்தில் சென்ற தோனியின் லக்கேஜை சக பயணி ஒருவர் தவறுதலாக மாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.


ADVERTISEMENT


அதேபோல அந்த பயணியின் லக்கேஜை தோனி எடுத்துச் சென்றுள்ளார். லக்கேஜ் மாறியதை கவனித்த அந்த பயணி, ஏர்லைன்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதையடுத்து தோனியிடம் இதை தெரிவித்த ஏர்லைன்ஸ் நிர்வாகம் இருவரின் லக்கேஜ்களையும் மாற்றிக்கொடுத்தது. ஆனால் இந்த குழப்பத்துக்கும் ஏர்லைன்ஸ் நிர்வாகத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT