ஐ.சி.சி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்த தோனி! 

Dhoni inducted into ICC Hall of Fame!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (I.C.C. - ஐ.சி.சி.) சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க வீரராக கருதி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும். அந்த வகையில் ஹால் ஆஃப் ஃபேமில் 7 புதிய பெயர்களை ஐ.சி.சி. இன்று (09.06.2025) அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்கள் பலர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி மேத்தீவ் கேய்டன், தோனி, க்ஹசிம் அம்லா, கிரேம் ஸ்மித், டேனியல் வெட்ரோரி, சனா மீர், மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இப்பட்டியலில் இடம்பெறும் 11வது இந்திய வீரராக தோனி இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2007 ஐசிசி உலக டி20 வென்ற கேப்டன், 2011இல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் ஆவார். 2009ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இணையும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bcci cricket ICC MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe