/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhoni-hit-six-csk-final.jpg)
மார்ச் மாதம் தொடங்க இருந்த 13-வது ஐபிஎல் தொடர் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பின் அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. வெற்றி முனைப்போடு இரு அணி வீரர்களும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது அணி நிர்வாகமும் அவ்வப்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
மும்பை அணி நிர்வாகம் நேற்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரோஹித் ஷர்மா சிக்ஸர் அடிக்கும் பந்து ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்த பேருந்தில் விழும் காணொளியைப் பகிர்ந்திருந்தது. அந்த வகையில் சென்னை அணி இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தோனி பயிற்சியின்போது சிக்ஸர் அடிக்கும் காணொளியைப் பகிர்ந்துள்ளது. அதில் அவர் தூக்கி அடித்த அந்த சிக்ஸர் எல்லைக் கோட்டைத்தாண்டிச் சென்று மைதானத்திற்கு வெளியே விழும் காட்சி பதிவாகியுள்ளது. சென்னை அணி ரசிகர்கள் இந்த காணொளியை தற்போது உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.
All you've got to do is watch this little video till the end and keep looping it. ?? #WhistlePodu #YelloveGame @msdhoni @mvj888 @russcsk pic.twitter.com/Yz5f1DQbOV
Follow Us