Skip to main content

“தோனிதான் பர்ஸ்ட்; நடராஜனை ஆஸி..யில் விசாரித்த இரண்டு பேர்” - சுவாரசியங்களை பகிர்ந்த டி.கே

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

“Dhoni is first; Two people inquired about Natarajan in Aussie” - D.K. who shared his impressions

 

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

 

இதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி போன்றோர் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரம் யோகிபாபுவும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.  விழாவில் பேசிய தினேஷ் கார்த்திக், “இங்கு வந்துள்ளது மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக விளையாடும் போது தான் அவரை பார்த்தேன். அவரது கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நடராஜனுக்கு யாரெல்லாம் உதவியுள்ளார்களோ அவர்கள் யாரையும் மறக்கமாட்டார். 

 

முதன் முதலில் சிறிய ஊரில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்தவர் எம்.எஸ்.தோனி. அவர் தான் எடுத்துக்காட்டு. சிறிய ஊரில் இருந்து வந்து பெரிதாக சாதிக்க முடியும் என காட்டியவர் அவர் தான்.  இன்று தமிழ்நாட்டில் அனைவருக்கும் பிடித்த நிறம் மஞ்சள் என்றால் அதற்கு அவர் தான் காரணம். நடராஜனைப் பற்றி மேத்யூ ஹைடனும், ரிக்கி பாண்டிங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கேட்கிறார்கள். அவர் ஏன் ஐபிஎல் முடிந்து இந்திய அணிக்காக ஆடவில்லை என கேட்கிறார்கள். அந்த அளவிற்கு நடராஜன் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்தனை நாட்கள் ஆடியும் நடராஜனை அதிகமானோர் ஞாபகம் வைத்துள்ளார்கள். 

 

தமிழ்நாட்டில் இருந்தும் வேறு ஊர்களில் இருந்து வந்தெல்லாம் கிரிக்கெட் ஆடியுள்ளார்கள். ஆனால் புதிதாக மைதானத்தை கட்டி என் ஊரில் இருந்து அதிகமானோர் விளையாட வரவேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம் அதை அவர் நிஜமாக்கி காட்டியுள்ளார். நானும் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இம்மாதிரியான சிந்தனை எனக்கு வந்ததே இல்லை” எனக் கூறினார்.

 

 

 

Next Story

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி,மேட்ச்வின்னர்; புகழ்ந்து தள்ளிய இந்திய வேகம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு மேட்ச்வின்னர் என்கிற பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழ்நாடு வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பந்துகளை சிக்சருக்கு அனுப்புவதை மட்டுமே எண்ணமாக வைத்து ஹெட் சிறப்பாக ஆடினார். 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

ஹெட்டின் அனுபவ பேட்டிங்கை தூக்கி சாப்ப்பிடும் அளவுக்கு அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் இருந்தது. 12 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு தொடக்கம் சொதப்பினாலும், அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் பேட்டில் இருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரிகளும், சிக்சர்களும் வெடித்து சிதறியது.18 பந்துகளில் 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

ஆட்டம் நிறைவடைந்த பின்பு மூத்த வீரர் புவனேஷ்வர் குமாரிடம் வெற்றி குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “இவ்வளவு ரன்களை நாங்கள் எடுத்து அதை எதிரணி துரத்தும் போது நாங்கள் அதிகமாக ரன்களை வாரி வழங்கினோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்த விரும்பினோம். நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் சரியாக நடக்கும். நடாரஜன் யார்க்கர் வீசுவதில் வல்லவர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் அமைதியான ஒரு வீரர் மற்றும் கடின உழைப்பாளி. சொல்லப்போனால் நடராஜன் உண்மையில் ஒரு மேட்ச் வின்னர். ஐபிஎல் ஆரம்பித்து இத்தனை வருடங்களில் எங்கள் பேட்டிங் இந்த அளவு சிறப்பாக இருப்பது இதுதான் முதல்முறை. இப்போது எங்களுக்கு 200 முதல் 220 ரன்களே குறைவான் இலக்கு போலத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு எங்கள் பேட்டிங் யூனிட் உள்ளது. வலைப்பயிற்சியில் அபிஷேக் மற்றும் ஹெட்டின் பேட்டிங் பயிற்சியில் பந்து வீசியதின் மூலம் என்களை மெருகேற்றிக் கொண்டோம். பேட்டிங் உங்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற்றுத் தரும். பவுலிங் தான் உங்களுக்கு சாம்பியன்ஷிப்பைப் பெற்றுத் தரும்” என்றார்.

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.