Skip to main content

தோனியிடம் 40 கோடி ஏமாற்றிய பிரபல நிறுவனம்: வழக்கு தொடர்ந்த தோனி...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியிடம் 40 கோடி ரூபாயை ஏமாற்றிய கட்டுமான நிறுவனம் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

dhoni files a case on amarapalli constructions

 

 

2009 முதல் 2016 முதல் அமரப்பள்ளி கட்டுமான நிறுவனத்திற்கு விளம்பர தூதரக பணியாற்றி வந்தார் தோனி. ஆனால் அந்த நிறுவனத்திற்காக அவர் நடித்து கொடுத்த விளம்பர படங்களுக்கு அவருக்கு வழங்கப்படவேண்டிய சம்பள தொகை 40 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. மேலும் அந்த நிறுவனம் வீடுகளுக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் வீடுகள் கட்டி தரவில்லை. எனவே பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து அந்நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் சம்பள பணத்தை வேண்டி தோனி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்திடம் ராஞ்சி நகரில் பங்களா ஒன்றிற்காக முன்பணம் செலுத்தியிருந்தார் தோனி. ஆனால் அந்த வீடும் அவருக்கு கட்டி தரப்படாத நிலையில் அது தொடர்பாக அமரப்பள்ளி நிறுவனம் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.