Advertisment

தோனியின் புதிய பொம்மை வீட்டுக்கு வந்துவிட்டது... சாக்ஷி தோனி வெளியிட்ட புதிய வைரல் புகைப்படம்...

தற்போது இந்திய ராணுவத்தில் பணியில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Advertisment

dhoni buys a new suv car

பொதுவாகவே பைக் மற்றும் கார் பிரியராக அறியப்படும் டோனி பல வகையான பைக்குகள் மற்றும் கார்களை வைத்துள்ளார். ஃபெராரி 599, ஜி.டி.ஓ, ஹம்மர் எச் 2, ஜி.எம்.சி சியரா உள்ளிட்ட கார்கள், கவாஸாகி நிஞ்ஜா எச் 2, கான்ஃபெடரேட் ஹெல்காட், பிஎஸ்ஏ, சுசுகி ஹயபுஷா மற்றும் ஒரு நார்டன் விண்டேஜ் போன்ற பல பெரிய பைக்குகளையும் அவர் வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது புதிய கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி தோனி, "உங்களது பொம்மை வீட்டுக்கு வந்துவிட்டது. உங்களை மிஸ் செய்கிறேன்" என பதிவிட்டு அந்த காரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் என்ற இந்த எஸ்யுவி காரை இந்தியாவிலேயே முதலில் வாங்கியுள்ளது தோனிதான் எனவும் சாக்ஷி பதிவிட்டுள்ளார்.

Advertisment

Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe