உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா மற்றும் விளையாட்டு உலகின் பிரபலங்கள், தங்களது புத்தாண்டு கொண்டாட்டங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில், தோனியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற புகைப்படத்தை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே நிகழ்ச்சியில் தோனி, சாக்ஷி நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.