Skip to main content

‘கொல்கத்தாவும் நானும்’ - ரவிசாஸ்திரியிடம் தோனி சொன்ன சுவாரசியம்

Published on 23/04/2023 | Edited on 23/04/2023

 

Dhoni and Kolkata; What Dhoni said to Ravi Shastri is interesting

 

நடப்பு ஐபிஎல் சீசனின் 33 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

இதன் பின் வர்ணனையாளரான ரவி சாஸ்திரியுடனான உரையாடலில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, “நாங்களும் பந்துவீச்சினைத் தான் தேர்வு செய்ய இருந்தோம். வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துள்ளார்கள். ஐபிஎல் தொடர் என்பது நீண்ட தொடர். கற்றுக்கொள்ளும் விஷயங்களை தேவையான தருணங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், ஒரு போட்டியில் அனைவரது பங்களிப்பும் இருப்பதே முக்கியமான ஒன்று. சிறந்த கேட்ச், சிறந்த ரன் அவுட், மிடில் ஓவர்களில் சிறப்பாக ஒரு ஓவரை வீசுவது என்பது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.  

 

நான் கொல்கத்தாவில் நிறையவே விளையாடியுள்ளேன். ஆனால் நான் அதிகம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் U16 அல்லது U19 போன்ற போட்டிகளில் விளையாடவில்லை. தொடக்கத்தில் நான் பணி செய்த கரக்பூருக்கு இங்கிருந்து 2 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். நான் அங்கு அதிகமான நேரம் செலவிட்டேன். நான் அங்கு அதிகமான கிரிக்கெட்டும் அதேபோல் கால்பந்தையும் விளையாடியுள்ளேன். அதனால் அந்த பந்தம் அங்கிருந்து வருகிறது என நினைக்கிறேன்” எனக் கூறினார்.

 


 

 

Next Story

'பிரகாசமான பிளே ஆப்'-சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
'Brilliant play-off'-Chennai Super Kings' stunning win

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டி இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவியது.

இதனால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரகாசமாகி உள்ளது. பெங்களூர், டெல்லி, லக்னோ போன்ற அணிகளின் ரன்களின் ரேட்டை விட சிஎஸ்கே வின் ரன் ரேட் பெரிய அளவில் உயரும். முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணி இதில் 141 ரன்கள் எடுத்திருந்தது, 142 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் 18.2 ஓவரில் 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

Next Story

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த சி.எஸ்.கே!

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
CSK kept the fans in suspense

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (12.05.2024) நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டிக்குச் செல்ல சென்னை அணிக்கு இந்த இந்த ஆட்டம் முக்கியமான ஒன்று ஆகும். இதனால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை ஸ்டேடியத்தில் சிறிது நேரம் காத்திருக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது எனவும் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இன்றைய போட்டி முடிந்ததும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பை தோணி அறிவிக்க வாய்ப்பு இருபதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  அதே சமயத்தில் சென்னையில் கடைசி  மேட்ச் நடந்து முடியும் பொழுது அனைத்து பார்வையாளர்களுக்கும் டீ சர்ட், பந்துகள் தரப்படுவது வழக்கம். அதேபோல் அனைவருக்கும் மைதானத்தை சுற்றி வந்து டாடா காட்டிவிட்டு நன்றி சொல்வதும் வழக்கம். இதனால் கூட ரசிகர்களை ஸ்டேடியத்தில் காத்திருக்க சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருக்கலாம் என்று ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது.