Advertisment

ஜடேஜாவின் கேப்டன்ஸி குறித்து தோனி அதிரடி கருத்து! 

dhoni Action Comment on Jadeja's Captaincy!

Advertisment

போட்டியின் போது ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் ஸ்பூனில் எடுத்து ஊட்டுவது போல சொல்லித் தந்துகொண்டிருக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற பின், அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பல்வேறு விஷயங்கள் குறித்த தனது கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை அடுத்தாண்டு தான் ஏற்கும் நிலை வரலாம் என்று கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு தெரியும். இதன் மூலம் தலைமைப் பதவிக்கு தயாராவதற்கான அவகாசம் கிடைத்ததாகவும் கூறினார். ஜடேஜா கேப்டனாக இருந்த முதல் இரண்டு போட்டிகளிலும் அவரது பணியை தான் மேற்பார்வைச் செய்தேன்.

இதன் பின் வந்த போட்டிகளின் போது, ஜடேஜா சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தியதாகத் தெரிவித்த தோனி, போட்டியில் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி செயல்பட வேண்டும் என ஸ்பூனில் எடுத்து ஊட்டுவது போல சொல்லித் தந்துகொண்டிருக்க முடியாது. அது ஒரு கேப்டனுக்கு நல்லதல்ல; கேப்டன் பொறுப்பு ஜடேஜாவின் ஆட்டத் திறனைப் பாதித்ததாகக் கருதுவதாகவும் தோனி கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe