கடந்த வாரம் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டி ''டை'' ஆனதை அடுத்து சூப்பர் ஓவர் முறையில் போட்டி நடத்தப்பட்டது. இதிலும் இரு அணிகளும் சம ரன்கள் எடுத்த நிலையில் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற ரீதியில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

Advertisment

dharmasena about his wrong decision in worldcup final

இதில் சூப்பர் ஓவரின் போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அப்போது பவுல்ட் வீசிய ஓவரின் நான்காவது பந்தினை பென் ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். பீல்டிங் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். ஆனால், ஸ்டம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, அங்கிருந்து பவுண்டரியை எல்லைக் கோட்டை சென்றடைந்தது. இதனையடுத்து அம்பயர் தர்மசேனா அதற்கு 6 ரன்கள் கொடுப்பதாக அறிவித்தார். இந்த ஓவர் த்ரோ முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள தர்மசேனா, "நான் டிவியில் இந்தப் போட்டியை திரும்பி பார்க்கும் போது தான் நான் செய்த தவறை அறிந்துகொண்டேன். அந்த சூழலில் எங்களால் டிவி ரீப்ளே பார்க்கமுடியாது. எனவே நான் களத்திலிருந்த மற்றொரு நடுவரிடம் ஆலோசனை நடத்தி, அதன்பின் 6 ரன்கள் வழங்கினேன். நாங்கள் எடுத்த முடிவு குறித்து நான் வருத்தப்படவில்லை" என கூறியுள்ளார்.

ஆனால் அவரின் தவறான தீர்ப்பால் தான் உலகக்கோப்பை இங்கிலாந்து அணிக்கு சென்றது எனவும், அந்த ரன் கொடுக்கப்படாமல் இருந்தால் நியூஸிலாந்து அணி வென்றிருக்கும் எனவும் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.

Advertisment