போட்டிக்கு அழைத்த யுவராஜ் சிங்... இளம் வீரர் கொடுத்த பதில்!

Yuvraj Singh

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள், ஒரு தோல்வி பெற்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் நடப்பு தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நான்கு போட்டிகளில் களமிறங்கிய அவர் மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார். 20 வயதே நிரம்பிய அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அவரது ஆட்டத்தை வியந்து பாராட்டிய யுவராஜ் சிங், நாம் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்ய வேண்டும், அதில் யார் அதிக தூரத்திற்கு சிக்ஸர் அடிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் எனப் பதிவிட்டு தேவ்தத் படிக்கலை போட்டிக்கு அழைத்தார்.

இதற்கு பதிலளித்த தேவ்தத் படிக்கல், "உங்களுடன் போட்டிக்கு வரவில்லை. நான் சிக்ஸர் அடிக்கும் இந்த முறையை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். உங்களுடன் இணைந்து பேட் செய்ய விரும்புகிறேன்,நான் தயார்" எனப் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது வைரலாகி வருகிறது.

IPL rcb Yuvraj singh
இதையும் படியுங்கள்
Subscribe