/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4181.jpg)
16 ஆவது ஐபிஎல் சீசனின் 64வது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் வாரிய மைதானத்தில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து 213 ரன்களை எடுத்தது.
214 எனும் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டெல்லி அணியில், ரஸோவ் 82 ரன்களும், பிரித்வி ஷா 54 ரன்களும், வார்னர் 46 ரன்களும் எடுத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)