Skip to main content

புதிய கேப்டன்... இளம் வீரரின் அரைசதம்... இரண்டாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி! 

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

2018ஆம் ஆண்டின் 11 வது ஐ.பி.எல் போட்டியின் 26வது ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது இதில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. தொடர் தோல்வியால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கெளதம் கம்பீர் விலகினார்.  ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்தில் தோல்வி, ஒருபோட்டியில் வெற்றி என்று டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ஷ்ரேயஸ் ஐயர் ஏற்றுக்கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கம்பீருக்கு பதிலாக  இளம் வீரர் ப்ரித்வி ஷாவும், கொலின் முன்ரோவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
 

delhi won the match

 

தினேஷ் கார்த்திக் வழக்கம்போல் சுழல்பந்து வீச்சாளர்களிடம் பந்தை கொடுக்க முதலில் பியஷ் சாவ்லாவின் பந்தில் திணறியவர்கள் அதன்பின் அடிக்கத் தொடங்கிவிட்டனர். ப்ரித்வி ஷா 44பந்துகளில் 62 ரன்கள் எடுத்து தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து பியூஷ்  சாவ்லாவின் பந்தில் அவுட் ஆனார். முன்ரோவும் 33 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின் இறங்கிய ஷ்ரயாஸ் ஐயர் கேப்டன் பதவியை உணர்ந்து கொல்கத்தா பந்து வீச்சாளர்களின் ஒவ்வொரு பந்தையும் துவம்சம் செய்து 10 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளை விளாசி 40 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 219 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்களை இழந்தது.

 

219 என்ற இமாலய இலக்கை அடைய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் சரியான தொடக்கத்தை கொடுக்கவில்லை மேக்ஸ்வல் பந்தில் கிறிஸ் லின் ஐந்து ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுனில் நரேன் எப்போதும்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்பது பந்துகளில் 26 ரன்கள் குவித்து போல்ட் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

 

delhi won the match


அடுத்து வந்த உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் வெளியேற. அதன்பின் இறங்கிய சுபாங்கில்   மற்றும் ரசூல்ஜோடி டெல்லி அணி பந்து வீச்சை பதம்பார்க்க தொடங்கியது.  சுபாங்கில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதிரடியாய் ஆடிய ரசூல் 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவ்ஸ் கான் பந்தில் பௌல்டானார். அதன் பின் கொல்கத்தாவில் விளையாட யாருமில்லை கடைசியில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.
 

டெல்லி சார்பாக மிஸ்ரா, போல்ட், மேக்ஸ்வெல் ஆகியோர் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர் ஆட்டநாயகனாக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வுசெய்யப்பட்டார். இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டெல்லி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா நான்கு தோல்விகளுடன் நான்காமிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் முதலிடத்தில் உள்ள சென்னையும், கடைசி இடத்தில் உள்ள மும்பையும் மோதவுள்ளன.

Next Story

கிளாசனின் அதிரடி வீண்; இந்திய இளம் வேகத்தின் அசத்தலால் கொல்கத்தா த்ரில் வெற்றி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் 2024 இன் மூன்றாவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக சால்ட் மற்றும் நரைன் களமிறங்கினர். நரைன் 2 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  அவருக்கு அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் நித்திஷ் ராணாவும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் சால்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு துணை நின்ற ரமன்தீப் சிங் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடிய சால்ட் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ரசல் இணை ஹைதராபாத் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் 7 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரசல் 64 ரன்களுடனும், ஸ்டாரக் 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றனர்.இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாட்டு வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக மார்க்கண்டே 2 விக்கெட்டுகளும் கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் இணை சிறப்பான துவக்கம் தந்தது. பொறுமையாகவும் அவ்வப்போது அதிரடியையும் காட்டிய அந்த இணை முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தது. அகர்வால் 32 ரன்களும் அபிஷேக் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களும்,  மார்க்ரம் 18 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்பு வந்த ஹென்றிச் கிளாசன், அப்துல் சமத் இணை பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அப்துல் சமத் 15 ரன்கள் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஹென்றிச் கிளாசன், சபாஷ் அகமது இணை கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.  சிக்ஸர்களில் மட்டுமே கவனம் செலுத்திய கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்படும் நிலையில் சபாஷ் அகமது மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.  கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது ரன் எதுவும் எடுக்காமல் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் வரலாற்றில் சாதனை விலைக்கு எடுக்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 53 ரன்களை வாரி வழங்கினார்.  அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் தோல்விக்கு காரணமாக அமைந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இளம் வீரர் ஹர்ஷத் ராணா சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி கொல்கத்தா அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கொல்கத்தா அணியில் ஹர்ஷத் ராணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும்,  ரசல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

-வெ. அருண்குமார்

Next Story

நங்கூரமாய் நின்ற ரிங்கு; நூலிழையில் தப்பிய லக்னோ

Published on 20/05/2023 | Edited on 21/05/2023

 

Anchored Ringu; Lucknow, which survived the war

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 68 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 176 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 58 ரன்களையும் டி காக் 28 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, தாக்கூர், நரேன் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இறுதிவரை களத்தில் போராடிய ரிங்கு 67 ரன்கள் எடுத்தார். ஜேசன் ராய் 45 ரன்களை எடுத்தார். லக்னோ அணி சார்பில் யஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். க்ருணால் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

நடப்பு தொடரில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் ரன் சேஸின் போது 7 இன்னிங்ஸ்களில் ஆடி 305 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 152.50 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 174.28 ஆகவும் உள்ளது. அதில் 4 முறை அரை சதம் அடித்துள்ளார். அதில் 20 முறை பவுண்டரிகளும் 22 முறை சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார்.