anrich nortje

கிரிக்கெட் ரசிகர்களின்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகள், கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவேடெல்லி வீரர் அக்ஸர் படேல்,பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல், டேனியல் சாம்ஸ் ஆகியோருக்கு கரோனா உறுதியானது.

Advertisment

கரோனாஉறுதிசெய்யப்பட்ட வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில்தேவதத் படிக்கல்கரோனாவிலிருந்து மீண்டு அணியில்இணைந்துள்ளார். இந்தநிலையில், டெல்லியின்வேகப்பந்து வீச்சாளர்அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகடெல்லி அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அன்ரிச் நார்ட்ஜேஇந்தியாவிற்கு வந்தபோதுஎடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனாபாதிப்பு இல்லை என தெரிய வந்ததாகவும், இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி ஏழுநாள் தனிமைப்படுத்தபட்டஅவருக்கு, தற்போது கரோனா உறுதியாகியுள்ளதாகவும் டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

ஐபிஎல்லில் கலந்துகொள்ளும்வீரர்கள், அணியுடன் இணைவதற்குமுன்பு ஏழு நாட்கள்தனிமையில் இருக்க வேண்டுமென்பதுஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் கரோனாதடுப்பு விதிமுறையாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில்விளையாடியவீரர்கள் ஏற்கனவே கரோனாபாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால், அவர்களுக்கு இதிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.