Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டெல்லியை வீழ்த்தியது ஐதராபாத்!

delhi capitals vs hyderabad sun risers ipls match

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று (29/09/2020) நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத் அணி.

Advertisment

முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் பேர்ஸ்டோ 53, வார்னர் 45, வில்லியம்சன் 41 ரன்கள் சேர்த்தனர்.

Advertisment

அதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

ஐதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3, புவனேஸ்வர் குமார் 2, கலீல், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனிடையே, ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால், டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு போட்டிக் கட்டணத்தில் ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதல் முறையாக கடைசி இடம் பிடித்துள்ளது.

hyderabad sunrises delhi capitals IPL match
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe