‘தோனி பற்றி ஒரு வார்த்தை’; டெல்லி வீரர்களின் பளிச் பதில்கள்

delhi capitals team players one word answer about dhoni 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 55 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (10.05.2023) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக துபே 25 ரன்களையும் ருதுராஜ் 24 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்களையும் அக்ஸர் 2 விக்கெட்களையும் குல்தீப், லலித்யாதவ், கலீல் அஹமட் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரூசோ 35 ரன்களையும் மனிஷ் பாண்டே 27 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியில் பதிரனா 3 விக்கெட்களையும் தீபக் சாஹர் 2 விக்கெட்களையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து ஒரு வார்த்தையில் குறிப்பிடுங்கள்என டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களிடம் கேட்டதற்கு ஒரு ஜாம்பவான், அண்ணன், தல, தலைவா,கூல்கேப்டன், பினிஷர், கடவுள், ஒரே வார்த்தையில் எப்படி அவரை பற்றி சொல்லுவது என்றெல்லாம் கூறி புகழ்ந்துள்ளனர்.இந்த வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோவானது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படியுங்கள்
Subscribe