Skip to main content

இலங்கை தொடர் - காயம் காரணமாக இரண்டு இந்திய வீரர்கள் விலகல்!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

team india

 

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, அடுத்தாக இலங்கையுடன் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையேயான இருபது ஓவர் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

 

இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அணியில் இருந்து இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியின்போது காயமடைந்த தீபக் சஹார் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.

 

அதேபோல் சூர்ய குமார் யாதவும் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியின்போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பும்ரா அணிக்கு திரும்பியுள்ளதால், தீபக் சஹாருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், சூர்ய குமாருக்கு பதிலாக விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

விஜய் படத்தை ரசித்த கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

surya kumar yadav watching vaarisu movie

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 233 ரன்கள் எடுத்து.  பின்பு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து இப்போட்டியில் தோல்வியுற்றது. 

 

இப்போட்டியில் தோற்றதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பினர். அப்போது விமானத்தில் சூர்யகுமார் யாதவ் விஜய் நடித்த வாரிசு படத்தை பார்த்து ரசித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

சுழன்ற சூர்யகுமார் யாதவ்வின் பேட்; சதமடித்து அசத்தல்; இந்தியா அபார வெற்றி

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Suryakumar Yadav's bat spun; 100% wacky; India won big

 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

 

டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும் இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தனர். 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய நிலையில், ராகுல் திரிபாதி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் தனது பேட்டை சுழற்ற அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 

 

16 ஓவர்களில் இந்திய அணி 163 ரன்களை எட்டிய நிலையில் சுப்மன் கில் 46 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் சதமடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 112 ரன்களை எடுத்தார். அதில் 7 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடக்கம்.

 

இதன் பின் இமாலய இலக்கைக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், உம்ரான் மாலிக், சாஹல், பாண்டியா தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ்வும் தொடர் நாயகனாக அக்‌ஷர் படேலும் தேர்வு செய்யப்பட்டனர்.