Skip to main content

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கோடிகளை கொட்டிய ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள்

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

deepak chahar - shardhul thakur

 

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை அதிகப்பட்சமாக இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தமிழக வீரர் நடராஜனை ஹைதராபாத் அணி 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

 

தொடர்ந்து நடைப்பெற்ற ஏலத்தில், தீபக் சஹாரை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியது. பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், லாக்கி பெர்குசனை 10 கோடிக்கு குஜராத் அணியும், ஜோஷ் ஹேசல்வுட்டை 7.75 கோடிக்கு பெங்களூர் அணியும், மார்க் வூட்டை லக்னோ அணி 7.5 கோடிக்கும், புவனேஷ்வர் குமாரை 4.2 கோடிக்கு ஹைதராபாத் அணியும் வாங்கின.

 

முஸ்தாபிஸூர் ரஹ்மானை 2 கோடிக்கும், ஷர்துல் தாகூரை 10.75 கோடிக்கும், குல்தீப் யாதவை 2 கோடிக்கும் டெல்லி அணி வாங்கியுள்ளது. ராகுல் சஹாரை 5.25 கோடிக்கு பஞ்சாப் ஏலத்தில் எடுத்துள்ளது. சஹாலை ராஜஸ்தான் அணி 6.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

 

உமேஷ் யாதவ், அடில் ரஷித், முஜீப், இம்ரான் தாஹிர், ஆடம் ஜம்பா, அமித் மிஸ்ரா ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

 

 

Next Story

ஐபிஎல் 2024 ஏலம் எப்போது? ; வெளியான புது அப்டேட்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

When is IPL 2024 auction? ; New update released

 

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் 2008 முதல் நடந்து வருகிறது. அதன் 17 ஆவது சீசன் 2024 இல் நடக்க உள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் வீரர்கள் ஏலம் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அது எப்போது நடக்கும் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. பெரும்பாலும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் ஏலம் நடக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியில் ஐபிஎல் ஏலமானது நடக்க உள்ளது. தக்கவைக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலை கொடுக்க கடைசி தேதி நவம்பர் 10 எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் 100 கோடி வரை ஏலத்தில் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கடந்த ஐபிஎல் ஏலத்தை விட 5 கோடிகள் அதிகமாகும்.

 

ஐபிஎல் 2023 இல் பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகை எனப்படும் அணிகளின் பர்ஸ் தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகமான தொகை வைத்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி 12.20 கோடிகள் வைத்துள்ளது. ஐபிஎல் அணிகளில் குறைந்தபட்ச பர்ஸ் தொகையாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 லட்சத்தை வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் 6.55 கோடிகளும், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் 4.45 கோடிகளும், லக்னோ அணி 3.55 கோடிகளும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3.35 கோடிகளும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1.75 கோடிகளும், கொல்கத்தா அணி 1.65 கோடிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 கோடிகளும் கொண்டுள்ளது.

 

ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் ஆவார். இவர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 18.5 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். இவரைத் தாண்டி ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த வீரரும் எடுக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

- வெ.அருண்குமார் 

 

 

 

Next Story

ஐபிஎல் இறுதி போட்டியில் ஏ.ஆர் ரஹ்மான் !

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

80 years of Indian cricket journey ; AR Rahman in the IPL final 2022

 

ஐபிஎல் 2022, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் முடிந்து இறுதி போட்டி நாளை (29.05.2022) பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடக்கவுள்ள இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். மேலும் அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' படத்தின் ட்ரைலர் இந்நிகழ்வின் போது வெளியிடப்படவுள்ளது. 

 

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என முன்னரே அறிவிப்பு வந்தது. இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 80 வருடமாக பயணிக்கும் இந்திய கிரிக்கெட்டை பெருமைப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் கலை நிகழ்ச்சிகள் மட்டும் 45 நிமிடத்திற்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.