Advertisment

மூன்றாவது ஒருநாள் போட்டி...இந்திய அணியிலிருந்து விலகிய ஹாட்ரிக் நாயகன்...!

மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி2o போட்டியில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைபற்றியது.

Advertisment

deepak-chahar-ruled-out-of-3rd-odi

இதைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.

இந்த போட்டியின் போது, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து தீபக் சஹார் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனிஇந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தீபக் சஹார் வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

india vs west indies indian cricket cricket Deepak chahar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe