deepak chahar

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரையொட்டி, அண்மையில் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் வேகபந்து வீச்சாளர் தீபக் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இஷான் கிஷனுக்கு அடுத்து இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் தீபக் சஹார்தான்.

Advertisment

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி இருபது ஓவர் போட்டியின்போது, காயமடைந்து பாதியில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான இருபது தொடரிலிருந்தும் சஹார் விலகினார். இந்தநிலையில் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கேள்விக் குறியாகியுள்ளது.

Advertisment

தீபக் சஹாரின் காயம் மோசமாக உள்ளதாகவும், அதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீபக் சஹார் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.