The decision to appoint Rohit Sharma as the ODI captain of the Indian team

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அத்துடன், தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியையும் அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதன்படி, கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகியோரும், மாற்று வீரர்களாக நவ்தீப் சைனி, தீபக் சாஹர், அர்சான் நாக்வாஸ்வல்லா, சௌரப் குமார் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.