Advertisment

'சிஎஸ்கே'வை மிரட்ட வருகிறார் டிவில்லியர்ஸ்!

abd

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் மோசமான பந்து வீச்சை சோதித்து பார்க்க ஏ.பி.டி களத்தில் இறங்குகிறார். கடந்த இரண்டு ஆட்டங்களாக களத்தில் இறங்காத டிவில்லியர்ஸ் இன்று மோசமான பந்து வீச்சை வைத்திருக்கும் சிஎஸ்கேவை விளாசவே களத்தில் இறங்குகிறார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

அணியின் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான குவின்டின் டி காக் இன்று ஆடவில்லை என்று அணியின் கோச் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். இதைப்பற்றி வெட்டோரி கூறியது, "டிவில்லியர்ஸ் பிட் (fit) ஆகிவிட்டார். குவின்டன் டி காக் ஊருக்கு போய்விட்டுத் திரும்புகிறார் ஆதலால் அவர் ஆடமாட்டார். கிரான்ட் ஹோம், மந்தீப் சிங் நன்கு விளையாடிக்கொண்டு வருகின்றனர். முதல் நான்கு ஆட்டக்காரர்களும் சீரான விளையாட்டையே வெளிப்படுத்துகின்றனர். நாளைய போட்டியில் சிறந்த பந்துவீச்சே வெற்றியை நிர்ணயிக்கும்" என்று நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதற்கு முன்னர் சிஎஸ்கேவுடன் நடந்த போட்டியில் டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணியை 205 ரன்கள் பெறவைத்தார். இருந்தாலும் அம்பத்தி ராயுடுவும், தொனியும் அதை அசால்ட்டாக சேஸ் செய்து வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

AB DeVilliers CSK ipl 2018 rcb
இதையும் படியுங்கள்
Subscribe