Advertisment

சென்னையின் தற்போதைய நிலை பயமுறுத்துகிறது... நிவர் புயல் குறித்து வார்னர் பதிவு!

David Warner

சென்னையின் தற்போதைய நிலை பயமுறுத்துகிறது என 'நிவர்' புயல் குறித்து ஆஸ்திரேலிய வீரரான வார்னர் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் இரு பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். இன்று காலை பதிவிட்டுள்ள முதல் பதிவில், மேகமூட்டம் சூழ்ந்த கடற்கரையின் புகைப்படத்தைப் பகிர்ந்து "சென்னையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு, இன்று மதியம் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் கொந்தளிக்கும் ஒரு காணொளியைப் பகிர்ந்து, சென்னையின் தற்போதைய நிலை பயமுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

வார்னரின்பதிவில் உள்ள புகைப்படம் மற்றும் காணொளி சென்னையில் எடுக்கப்பட்டவை அல்லஎன்பதால் 'இது சென்னை அல்ல' என்று சிலர் வார்னருக்குப் பதிலளித்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் 'அது சென்னையோ... இல்லையா... இந்திய வீரர்களே இது குறித்துப் பேசாத போது, புயல் குறித்த தகவல் அறிந்ததும் நமக்காகப் பதிவிட்டுள்ளாரே, அதற்கு நன்றி கூறுவோம்' என வார்னருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe