ADVERTISEMENT

இவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்க - நியூஸிலாந்து வீரர்களை எச்சரித்த வெட்டோரி...

05:50 PM Jul 08, 2019 | kirubahar@nakk…

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நாளை தனது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

16 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பைகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. ஏற்கனவே ஒரு லீக் போட்டியில் இரு அணிகளும் விளையாட இருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2003 உலக்கோப்பைக்கு பிறகு நாளைத்தான் இரு அணிகளும் உலகக்கோப்பையில் மோத உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து ஐசிசி இணையத்தளத்திற்காக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வெட்டோரி எழுதியுள்ள கட்டுரையில் இந்திய அணியை வெல்வது, அதன் பலம், பலவீனம் குறித்து பேசியுள்ளார்.

அக்கட்டுரையில், "இந்திய அணி இப்போது இருக்கும் நிலையில், மிகப்பெரிய ஸ்கோரை அவர்களுக்கு இலக்காக நிர்ணயிப்பதுதான் நியூஸிலாந்து அணிக்கு பாதுகாப்பு. அதுபோல ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு எதிரணி வீரர்களால் விளையாட முடியாத அளவுக்கு இருக்கிறது. அனைத்து பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். பும்ரா பந்துவீச்சை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதேபோல டெத் ஓவர்களில் ஷமியின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது.

மேலும் ஹர்திக் பாண்டியா, ரிஷப்பந்த் ஆகியோர் சுழற்பந்துவீச்சை கையாளும் விதம் அபாயகரமாக இருக்கிறது. இந்திய அணியில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பணியை சிறப்பாகச் செய்கிறார்கள். எனவே இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி ஆக்ரோஷமான பந்துவீச்சையும், ஆவேசமான பேட்டிங்கையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும். தொடக்கத்திலேயே இந்தியாவின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு நெருக்கடி தர வேண்டும். ரோஹித் சர்மா, விராட் கோலி விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால் நியூஸிலாந்து அணிக்கு அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனம், பலம் தெரியும். அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு, வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT