ipl

Advertisment

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்றுவரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து 10 அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்ததோடு, புதிய அணிகளை வாங்குவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டது.

அதனைத்தொடர்ந்து புதிய அணிகளை வாங்குவதற்கான ஏலம் இன்று (25.10.2021) நடைபெற்றது. இதில் அதானி குழுமம், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமம் லக்னோ அணியை 7,000 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் சிவிசி கேப்பிடல் அகமதாபாத் அணியை 5624 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.