Skip to main content

 மூன்றாவது வெற்றியை சாதனையுடன் ருசித்த சி.எஸ்.கே 

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

11வது ஐ.பி.எல்  போட்டியில் புனேவில்  நடந்த நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான்  அணியின் கேப்டன் ரஹானே பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 204 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை சேர்த்து 106 ரன்களை எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். அது மட்டுமல்லாமல்  ஐ.பி.எலில்  தனது 3வது சதத்தை பதிவு செய்தார். சென்னை அணியில் வாட்சனுக்கு அடுத்து ரெய்னா 9 பௌண்டரிகளுடன் 29 பந்துகளுக்கு 46 ரன்கள் விளாசினார். அதன்பின் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

csk won the match

ராஜஸ்தான் அணி சார்பாக ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டும், பென் லௌகிஹிலின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அதன்பின் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கமே சற்று தடுமாற்றத்துடன் தனது பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க வீரர்களான ரஹானே 16 ரன்களும், ஹென்றிச் கிளாசான் 7 ரன்களும் மட்டுமே எடுத்து வெளியேறினர். அதன்பின் இறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்து தீபக் சாஹர் பந்தில், வீசகரண் சர்மா கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் . ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக  பென் ஸ்டோக்ஸ் 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு  சிக்ஸர் அடித்து 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். 

csk won the match

 

அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி 18.3 ஓவருக்கு 140 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை அணி 64 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்று  தரவரிசைப் பட்டியலில் மூன்று வெற்றிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி  சார்பாக ப்ரவோ, தாகூர், கரண் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது  ஷேன் வாட்சனுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆட்டத்தின் வெற்றியோடு ஒரு சாதனையும் படைத்துள்ளது சென்னை அணி. இதுவரை  நடந்த ஐ.பி.எல் போட்டிகளிலேயே அதிவேக 150 ரன்களை அடைந்த அணி என்ற சாதனையை  படைத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 13 ஓவர்களில் 150 ரன்களை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் - வெற்றியின் ரகசியம் குறித்து பட்லர்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
The mind is a powerful thing - Butler says on the secret of success

மனம் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என தனது ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 19ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளசிஸ், கோலி இணை சிறப்பான ஆடினர். மிகவும் சிறப்பாக ஆடிய கோலி ஐபிஎல்-இல் தனது 8ஆவது சதத்தைப் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 113 ரன்கள் குவித்தார். 

பின்னர், 184 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கேப்டன் சாம்சன், பட்லர் இணை அட்டகாசமாய் ஆடியது. சாம்சன் அரை சதம் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி வரை களத்தில் நின்ற பட்லர் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இறுதியில் அணி வெற்றி பெற 1 ரன்னும், பட்லர் சதம் அடிக்க 6 ரன்களும் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடித்து சதம் கடந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். இதன் மூலம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கடந்த சில ஆட்டங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த பட்லர், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதம் கடந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியதால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அப்போது பேசிய பட்லர் “இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது, கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. அதையெல்லாம் தாண்டி தற்போது பெற்றுள்ள வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கிரிக்கெட்டை எவ்வளவு காலம் விளையாடியிருந்தாலும், அந்த ஆட்டத்தில் கவலைகள் மற்றும் அழுத்தங்கள் உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதைப் போக்க மனம்தான் ஒரு சக்திவாய்ந்த விஷயம், மனதைத் தோண்டிக்கொண்டே இருங்கள், கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். அதோடு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாகிவிடும், சில சமயங்களில் அது சரியாகிவிடும் என்று நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும். நான் கடந்த ஆட்டத்தில் 13 ரன்களைப் பெற்றிருந்தாலும், மிகவும் நன்றாக உணர்ந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் சிறப்பாக ஆடியிருந்தேன், அதைப் போல் ஆட எனக்கு ஒரு இன்னிங்ஸ் தேவை என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நாங்கள் இந்த சீசனை நன்றாகத் தொடங்கி இருக்கிறோம். நாங்கள் இப்போது மூன்று சீசன்களாக இணைந்து ஆடி வருகிறோம், எங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது, ஆனால் ஒரு அணியாக தொடர்ந்து கடினமாக உழைத்து இதே மாதிரியான சிறப்பான ஆட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.