Advertisment

தோனிக்கு திடீர் கட்டுப்பாடு! - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிரடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் காவிரி விவகாரம் தொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களின் அமைப்புகளும் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தற்போதைய நிலையில், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கையும், முழக்கங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Dhoni

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னையில் விளையாட வரும்போதெல்லாம் ஓய்வு நேரத்தில் தனது பைக்கில் வெளியில் சுற்றிவருவது வழக்கம். அதேபோல், தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து வெளியில் சென்று வருவதையும் அவர் விரும்பக்கூடியவர்.

இந்நிலையில், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில், தோனி எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்லவேண்டாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

CSK ipl 2018 MS Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe