கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதும் அனைத்து அணி வீரர்களும் உற்சாகமாக தங்களைதயார்ப்படுத்த ஆரம்பித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை வந்து, தங்களது வலைப்பயிற்சியைத்தொடங்கினர். அதன் அடுத்த கட்டமாக, இன்று அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருக்கின்றனர்.
அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல இவ்வீரர்கள் அமீரகம் சென்றடைந்தவுடன் அங்கும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.